தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதிமுக்கிய தொழில்களில் மீன் பிடித் தொழிலும் ஒன்று. 11 லட்சத்திற்கும் அதிகமான மீனவ மக்கள், உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் என பலலட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை அளித்தும் பெரும்பான்மை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கியும், குறிப்பிடத்தக்க வருவாயினை குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டியும், மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கையில் மீன்பிடித் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது.இத்தொழிலை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், கடந்த 50 ஆண்டுகளாக எந்த முயற்சியையும் அரசுகள் எடுக்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய கடற்கரையான 7516 கி.மீட்டர் நீளத்தில் 1076 கி.மீட்டர் நீளமுடைய நாட்டிலேயே இரண்டாவது கடல் வளத்தை கொண்டிருக்கக்கூடிய தமிழக மீன்பிடித்தொழில், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகளின் மோசமான கொள்கை, ஊழல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய நாட்டிலேயே முன்னணியில் இருந்த தமிழக மீன்பிடிப்பு தற்போது அதன் முன்னணி வரிசையை இழந்து 5,ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
மீன்பிடியில் தமிழகம் பின்னுக்கு போக முக்கியக் காரணம் மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 50 ஆண்டுகளாக அரசுகள் நிறைவேற்றவில்லை. மிக நீண்ட கடற்கரையை கொண்ட தமிழகத்தில் பெரிய துறைமுகம் என்றால் சென்னை, தூத்துக்குடி, சின்னமுட்டம் ஆகிய துறைமுகங்கள் மட்டுமே.நடுத்தர மீன்பிடித் துறைமுகம் நான்கும் இதர மீன் இறங்குதளங்கள் 300ம் உள்ளன. ஆனால் இவைகளில் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் எதுவுமில்லை. இயற்கை சீற்றக் காலங்களில் மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வசதிகள் இல்லை. இதனால் தமிழகத்தை விட பாதியளவு கடற்கரை நீளம் கொண்ட கேரள மாநிலம் மீன்பிடிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் வளர்ச்சி பெற்றது. தேர்தல் நேரத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், மீனவர்களின் வாக்குவங்கியை கவர பல்வேறு வாக்குறுதியை வழங்கின. ஆனால், அவை இன்று வரை கடலில் கரைத்த பெருங்காயமாகவே கரைந்துபோனது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடரும் இலங்கை கடற்படை தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை காக்க தவறினார்கள். தற்போது மத்தியில் மோடி அரசுபதவியேற்றபின் மேலும் இவை தீவிரமடைந்துள்ளது. ஆனால் தற்போதைய முதல்வரும் முன்னாள் முதல்வரும் கடிதம் எழுதுவதிலும் மீனவர் பிரச்சனை முன்னுக்கு வரும் போது கட்சத்தீவை மீட்பேன் என வாய்ச்சவடால் விடுவதுமே தொடருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை துவக்குவது, இலங்கை- இந்திய கடற்பரப்பில் குறிப்பாக பாக்.ஜலசந்தியின் மீன்பிடிப்பை ஒழுங்கமைப்பது மாற்றுத் தொழிலான ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான ஆக்கப்பூர்வமான திட்டமிடல் ஆகியவற்றை தமிழக அரசுகள் செய்யத் தவறின.
மீன்வளம்
"""""""""""""""""""
தமிழக கடல் வளத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து தமிழகஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. கடலோர நகரங்களில் குப்பைக் கழிவுகள், சாக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் தங்குதடையின்றி கலக்குகின்றன. ஆறுகள் அனைத்தும் ரசாயனமயமாகி போயின. கடற்கரையோரத்தில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலை கழிவுகள்கடலில் கலக்கின்றன. தாதுமணல் கொள்ளையால் கடற்கரை நிலமும், வளமும் சூறையாடப்பட்டது. கடலுக்குள்ளும் இரட்டை மடி, சுருக்குமடி வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற தங்கு தடையற்ற மீன்பிடிப்பு தொடர்கிறது. மேலும், இந்திய எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட அந்நியக் கப்பல்கள் வருகையால் ஆழ்கடலிலிருந்து கரை நோக்கி வரும் மீன்வளம் சுரண்டப்படுகிறது. அந்நியக் கப்பல்களை அனுமதிக்க மத்திய அரசை திமுக, அதிமுக அரசுகள் எதிர்க்கும் திறனற்று அவர்களின் பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தும் ஆட்சியாளர்களாக மாறிப் போனார்கள்.
அட்டை, சங்கு மீதான தடை
கன்னியாகுமரி முதல் நாகை மாவட்டம் வரை அட்டை, சங்குகுளி தொழிலாளர் பல லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடல் அட்டை மற்றும் சில சங்கு வகைக்கு தடை விதித்தார். அந்தத் தடையை நீக்க வலியுறுத்தி மீனவர்கள் நீண்ட போராட்டம் நடத்தியும் திமுகவின் மத்திய அமைச்சர்கள் தடையை நீக்கவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அட்டை,சங்கு மீதான தடையை நீக்க பாடுபடுவேன் என ஜெயலலிதா சூளுரைத்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காகஒருமுறை கூட மத்திய அரசை வலியுறுத்தவில்லை. மாறாக, மாநில காவல்துறையும், மாநில வனத்துறையும் கடல் அட்டை பிடித்ததாக ஏராளமான மீனவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளின. மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும்மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றும் ஜி.ஆர்.இசட் போன்ற சட்டங்களை இரண்டு அரசுகளுமே தமிழகத்தில் அமல்படுத்தியது. வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு சர்வதேச விலையில் வரியில்லா எரிபொருள் வழங்குவதுபோல் நமது மீனவர்களுக்கும் டீசல்-மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளை வரி நீக்கம் செய்து தேவையான அளவுகொடுக்க வேண்டுமென கோரும், மீனவர்களின் கோரிக்கையை இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுமே கண்டுகொள்ளவில்லை. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படைந்து கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டருடன் கூடிய மீட்புக்குழு அமைக்கத் தவறினார்கள். வெளிநாடு சென்று பிழைக்கப் போகும் மீனவர்கள் துயரடையும் போது அவர்களை மீட்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
உள்நாட்டு மீனவர்-விற்பனையாளர்கள்
தமிழகத்தில் ஐந்தரை லட்சம்ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு மீன்பிடிப்பில் 90 சதவீதம் அரசின் பொது நீர்நிலைகள் ஆகும். இவற்றிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் 2.40 லட்சம் டன் மீன்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம்பேர் இத்தொழிலை நம்பியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு பொது நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவக் கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து பறித்து யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மீனவர்கள் பல்வேறு போராட்டம் மற்றும் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மூலம் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து செவி சாய்க்காமல், குளம், குட்டை, ஏரிகளை பணம் படைத்தவர்களுக்கு தாரை வார்த்தது அதிமுக அரசு.மேலும் 2016ஆம் ஆண்டு திருத்த சட்ட மசோதா என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து ராட்சச விசைப்படகுகளுக்கு சலுகையும் பாரம்பரிய மீனவர்களுக்கு உரிமைப் பறிப்பையும் செய்தது அதிமுக அரசு. மேலும் தமிழக மீன் வளத்துறை நிர்வாகம் அதன்மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரைஊழலில் புரையோடிப்போய் உள்ளது.இத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சிக்காலத்தில் சீரழிக்கப்பட்டது. தற்போது கூட தமிழக மீன்துறை அமைச்சரின் மீது பல்வேறு ஊழல் புகார் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கூட்டுறவு சங்கங்கள், மீனவர் நலவாரியம் என அனைத்தும் பெயரளவிலேயே உள்ளன. மீனவர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு உகந்த திட்டமிடலை முறையாகச் செய்யவில்லை. மீனவர்களின் உயிர்க் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவ உதவி, மீனவ குழந்தைகளின் கல்வி,பேறுகால உதவி, திருமண உதவி, முதியோர் உதவி என பல்வேறு உதவிக்கான அறிவிப்பு மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
1413மீனவக் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 7 லட்சத்து 4 ஆயிரத்து 111 உறுப்பினர்களுக்கு கடந்தாண்டு மட்டும் நலவாரிய பயன்கள் வெறும் ரூ. 3.28 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் உள்ள மீன்விற்பனையாளர்களுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகளும் சமூக நலத்திட்டங்களும் வேண்டுமென கோரிக்கைவைத்து அவை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. எனவே, கடல் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் உள்ளிட்ட மீன்பிடி சார்பு தொழில் புரிவோர் நலனை மேம்படுத்த சரியான மற்று கொள்கை தேவை
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவ தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொடர்புக்கு 9940817745
Email: crscpim.rmm@gmail.com