இந்தியாவின் கீழ்வானில் உதித்த சிவப்பு நட்சத்திரம் ஜோதிபாசு!
`திதா’ என்று இளைய தலைவர்களும் ஜோதி பாபு என்று லட்சோப லட்சம் தோழர்களும் அழைத்துக் கொண்டாடிய ஜோதிபாசுவுக்கு இன்று நினைவு நாள். ஜோதிபாசு என்ற பெயரைச் சொன்னாலே, அச்சம் அல்லது பெருமிதம் கொள்பவர்கள்தாம் உண்டு. இன்று தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அவரது பெயரிடப்பட்டு உலாவருவதைப் பார்க்கலாம். மறைந்த ஜோதிபாசு குறித்து தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தனது பகிர்தலில், ''கொல்கத்தாவில் கடந்த 1914ம் ஆண்டு ஜுலை 8ம் தேதி அன்று ஜோதிபாசு பிறந்தார். அவரது தந்தை நிஷிகந்தா பாசு, ஒரு டாக்டர். தாயார் பெயர் ஹேமலதா. மிகவும் கட்டுப் பெட்டியான குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு, 1920 ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள லொரெட்டோ பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பள்ளிக் கல்வியை கொல்கத்தாவில் முடித்த அவர், 1935 ம் ஆண்டு பாரிஸ்டர்’ (வக்கீல்) பட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றார். அந்தச் சமயத்தில், இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்தது. எனவே, லண்டனில் இருந்தபடியே அங்கிருந்த இந்திய மாணவர்களுடன் இணைந்து ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜோதிபாசு போராடினார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் உள்ள கம்யூனிச தலைவர்களின் நெருக்கம் அவருக்குக் கிடைத்தது. ரஜினி பாமிதத் உள்ளிட்ட தலைவர்களின் வழியில் கம்யூனிஸ்டு பாதையில் நடக்க ஆரம்பித்தார். ஜோதிபாசு தன் வாழ்நாளில் அடக்குமுறைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர் கொண்டிருக்கிறார். “இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்கைத் தவிர’’ என்ற மார்க்சின் பெருமைமிகு வரிகள் ஜோதிபாசுவின் குடும்பச் சூழலில் பொருந்துவதில்லை. ஆனால் பாசு கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்ட நிலையில், இ.எம்.எஸ், சுர்ஜித், பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அனைவருமே அது போன்ற வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு வந்தவர்களே, தேசிய இயக்கத்தின் ஈர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நேதாஜி குறிப்பிட்ட முள் படுக்கையைத் தேர்ந்தெடுக்க இத்தகையத் தலைவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இளம் தலைமுறை கற்றுத்தேற வேண்டிய ஒன்று.
ஒருமுறை பாட்னா ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது நக்சலைட் தீவிரவாதி ஒருவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டான். குண்டு குறிதவறி அவரது பக்கத்திலிருந்த ஒரு எல்.ஐ.சி. தோழர்மீது பாய்ந்தது. அந்தச் சமயம் எதற்கும் அஞ்சாமல் பதற்றமடையாமல் இருந்தார் ஜோதிபாசு. அவர் ஓடி ஒளியவில்லை. 'அவனைப் பிடியுங்கள்’ என்று அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டினார். அத்தகைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட துணிச்சலாக வெகு சிலருக்கே உண்டு. 1946ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடந்த வங்காள சட்டசபை தேர்தலில், ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன் முதலில் களம் கண்ட தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அன்றிலிருந்து 2001 ம் ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபைக்குத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இடையே, 1972 ம் ஆண்டு மட்டும் தோல்வியடைந்தார். 1962ம் ஆண்டில் சீனாவில் போர் நடந்தபோது கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவர் சிறையில் இருந்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து மார்க்ஸிஸ்ட் தோன்றியதும் அதில் அவர் இணைந்தார். இந்தியாவிலும் சரி, மேற்கு வங்காளத்திலும் சரி மார்க்ஸிஸ்ட் கட்சியை நிலை நிறுத்திய முக்கியத் தலைவர்களில் அவரும் ஒருவர். 1989ம் ஆண்டிலும், 1996 ம் ஆண்டிலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத ஆட்சி மத்தியில் வரும் அளவுக்கு அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ஜோதிபாசு என்றால் அதுமிகையாகாது.
மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ மற்றும் மத்திய கமிட்டியில் உறுப்பினராகத் தொடர்ந்து நீடித்து வந்தார். 2000 ம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக பொலிட்பீரோ பதவியிலிருந்து அவர் விலகினாலும், கட்சி விடவில்லை. எனவே, கட்சியின் வற்புறுத்தல் காரணமாக 2008 ம் ஆண்டு வரை கட்சிப் பொறுப்பில் நீடித்தார்.
1969-75 காலகட்டத்தில் இந்திராகாந்தி ஏவிய அரைப் பாசிச அடக்குமுறைக்கும், 1975-77 காலகட்டத்தின் நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மைக்கும் முகங்கொடுத்து இயக்கத்தை கட்டிக் காத்தவர் ஜோதிபாசு. 1977 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பின், அதே ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். 1977 முதல், 2000ம் ஆண்டுவரை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 23 ஆண்டு காலம், மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருந்தார். இந்தியாவில் யாருமே இவ்வளவு நீண்ட காலம் முதல் மந்திரியாக இருந்தது கிடையாது. மேலும், தொடர்ந்து 23 ஆண்டு காலம் பதவியில் இருந்ததும் கிடையாது. அத்தகைய அபூர்வ சாதனையை ஜோதிபாசு நடத்திக் காட்டினார். 1996ம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை மத்தியில் உருவானது.
அப்போது, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். வி.பி.சிங் உள்பட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைமையிலேயே ஆட்சி அமைக்கலாம் என்றும், ஜோதிபாசு பிரதமராகலாம் என்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்தனர். கட்சி பாகுபாடின்றி ஜோதிபாசுவுக்கு ஆதரவு பெருகியது. ஆனால், கூட்டணி ஆட்சிக்குத் தலைமை ஏற்பதில்லை’ என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு கூறிவிட்டது. இரண்டு முறை அந்தக் குழு கூடியபோது, இந்த முடிவில் உறுதியாக இருந்தது. கட்சி எடுத்த அந்த முடிவால், ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு, மிகப்பெரிய வரலாற்று பிழை’ என ஜோதிபாசு அப்போது தெரிவித்தார். அது உண்மை, என்பதை பின்னாளில் அந்தக் கட்சியின் தலைவர்கள் உணர்ந்தனர்'' என்றார்.
இந்தியாவின் கீழ்வானில் உதித்து, மார்க்ஸிஸ்ட் கட்சியை இந்தியாவின் தலைமை பீடத்தின் அருகில் வரை அழைத்துச் சென்ற சிவப்பு சூரியன்’ அஸ்தமித்த தினம் இன்று