வியாழன், 23 ஏப்ரல், 2020
புதன், 22 ஏப்ரல், 2020
கொரோனா தொற்றும்.. மீனவர்கள் பட்ட துயரமும்.
கடல் உணவு மனிதனின் முக்கிய உணவுகளில் ஒன்று ..!
"மீன் சாப்பிடுங்கள்" என்று சொல்லாத மருத்துவர்களே கிடையாது,
மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட... தங்கள் நோயாளிகளுக்கு மீன் சாப்பிடுங்கள் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
அதுவும் முக்கியமாக கொலஸ்டரோல், அதீதஎடை , இருதயநோய் உள்ளவர்களை மீன் சாப்பிட வேண்டும் என்று என்று பரிந்துரைக்கிறார்..
மனிதர்களின் புத்திக்கூர்மை, உடல்திடம், என மனிதனை ஆரோக்கிய வட்டத்துக்குள் வைத்திருப்பதில் மீனின் பங்கு மிக முக்கியமானது,
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடைய உணவு மீன் உணவாகும்..
காரணம் மீன் உணவில் அதிக அளவில் புரோட்டீன் ஒமேகா-3 போன்ற சத்துக்களும் நிறைந்திருப்பதால் வாரத்தில் இரண்டு முறையாவது மீன், நண்டு, இறால்,உள்ளிட்ட கடல் உணவை எடுத்துக்கொள்வது தான் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மனிதனுக்கு நிறைவாக இருக்கும்,
கொரோனோ போன்ற தொற்றுநோய்கள் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கடல் உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகிறது,
உலக நாடுகள் முழுவதும் அந்தந்த நாட்டில் உள்ள மக்களுக்கான புரதச் சத்து மிகுந்த உணவுகளை உத்தரவாதம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது,
பக்கத்து நாடான இலங்கையில் கூட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித தடையும் கிடையாது, பிடிக்கின்ற மீன்களை கடல் சாராத மாவட்டங்களின் சந்தைக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைப்பதில் அரசே முன்னின்று பங்காற்றுகிறது....
ஆனால் தமிழகத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது
தமிழக மீன் துறையை பொறுத்த வரையிலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது... மறுபுறத்தில் மீன் விற்பதற்கு தடை கிடையாது மீன் சந்தைகளுக்கு தடை கிடையாது என்ற அறிவிப்பும் உள்ளது,
இது மீனவர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது காரணம்,
கடலுக்கு சென்று மீன் பிடிக்காமல் எப்படி? மீன் விற்பனை செய்ய முடியும்" என்கிற கேள்விதான். மீன்பிடித் தொழிலும் விவசாயத்தை போன்றதே மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான உணவு பொருள் என்பதால் இதில் தெளிவான விளக்கத்தை தமிழக மீன்துறை தெளிவுபடுத்த வேண்டும்,
மீன்பிடித்தொழிலுக்கு செல்லலாம் என்றால் மீனவமக்களுக்கான
வழிகாட்டுதல்கள்,
கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிக்க வேண்டும்.
மீன் வியாபாரத்திற்கு செல்லும் சில்லறை விற்பனையாளர் மற்றும் மீனவ மகளீர்களுக்கான வழிகாட்டுதல்கள் ,
அவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்,
அறிவித்து சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து,தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றால் மீனவமக்களின் வாழ்வதாரத்திற்கான
ஏற்பாடுகளை அரசு உறுதியாக செய்ய வேண்டும்.
காரணம் ஊரடங்கு உத்தரவையொட்டி மீனவர்களுக்கு ஏற்பட்ட தொழில் இழப்பு என்பது சாதாரண இழப்பீடாக எடுத்துக்கொள்ளக்கூடாது ,
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படை தாக்குதல்...
மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை இல்லாமை, இன்னும் ஏராளமான காரணங்களால் வருடத்தில் 100 நாட்கள் அல்லது 150 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்லுகிற நிலையில், தற்போது ஒரு மாதமாக மீன்பிடித் தொழில் இழப்பு என்பது மீனவர்களுக்கு பெரும் இழப்பாகும்,
தமிழகத்தில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் விசைப்படகுகள் 75,000 நாட்டுப்பாடகுகள், இவைகளில் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கூடிய 15 லட்சம் மீனவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகவும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர்
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு தமிழ் நாட்டில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது,
நாகை மாவட்டத்தில்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை அக்கரைபேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஏப்ரல்,14 வரை கடலுக்கு செல்லாமல் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடுவையாற்று கரையில் நிறுத்திவைத்துள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகம், மீன் ஏலக்கூடங்கள், மீன் மார்க்கெட்டுக்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஐஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆட்கள் இன்றி நாகை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது.
1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், 50 ஆயிரம் மீன்பிடி தொழில் சேர்ந்தவர்களும் வேலையிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 50 கோடி அளவிலான மின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது நாகை மாவட்டத்தில்
குமரி மாவட்ட மீனவர்களை பொருத்தவரை வாரக்கணக்கில்... மாதக்கணக்கில்... கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் வழக்கம் உடையவர்கள்,
அரசின் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு சென்று விட்டன அவைகள் தற்போது கரைக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறது,
தேங்காய் பட்டினம், குளச்சல் உட்பட பல இடங்களில் 1000 த்திற்கு மேற்பட்ட விசை படகுகள் நிறுத்த பட்டுள்ளன. ஒவ்வெரு படகிலும் பல லட்சம் மதிப்பிலான ஏற்றுமதி மீன்கள் தேக்கம் அடைந்துள்ளது. மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர்.
அவர்கள் பிடித்து வந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிறுவனங்கள் அதன் வாகனங்கள் வராமல் இருப்பதால் தற்போது மீன்கள் படகிலேயே தேங்கிக் கிடக்கின்றன ,
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பெருமளவு மீனவர்கள் கூட்டம் கூடாமல் ஏலம் நடத்தி சில்லறை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மீன்களை வழங்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமென குமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இம் மாவட்டத்தின் பிரதான தொழில் மீன்பிடிதான், மூன்றாயிரம் விசைப்படகுகளும் 15,000 நாட்டுப் படகுகளும் தற்போது வேலை இழந்து காணப்படுகிறது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள், பெரிய விசைப்படகுகள் மட்டுமன்றி சாதாரண கைவலை,கரைவலை, எந்திரம் பொருத்தப்படாத கட்டுமரங்கள், போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது, கடலுக்குள் மீனவர்கள் இறங்கினாலே கடற்படை கடலோர காவல்படையினர், விரட்டியடிக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவிற்கு முன்னால் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்குள் விரித்து வைத்திருந்த நண்டு வலைகளை திரும்பச் சென்று சென்று எடுப்பதற்கு கூட கடற்படையினர் அனுமதி அளிக்காமல் உள்ளனர், இதனால் கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்து மீனவர்களின் உடமையாக இருக்கக்கூடிய வலைகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பல மீனவர்கள் உள்ளனர், கரைவலை வைத்து பிடிக்கின்ற மீனை மீனவப் பெண்கள் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.
மேலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை உள்ளது ,
ஏப்ரல் 15ம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை வரை தேதி வரை வரை மீன்பிடி தடை காலம் துவங்கி விடும் ஆகமொத்தம் மீன்பிடித்தொழில் கால் ஆண்டுகளுக்கு மேலாக தொடர் இழப்பை சந்திக்க உள்ளது.
இவ்வளவு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு இருக்கக்கூடிய மீனவ மீனவ இருக்கக்கூடிய மீனவ மீனவ சமூகத்திற்கு அரசின் நிவாரணம் என்பது பூஜ்ஜியம் ஆகவே உள்ளது.
ஊரடங்குச் சட்டத்தால் இயல்பு நிலையை இழந்த நாட்டு மக்களுக்கு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். அதில் விவசாயிகள், விவசாயக் கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், முறை சார்ந்த தொழிலாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என பட்டியல் நீள்கிறது,
மாநில அரசும் அதன் பங்கிற்கு ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை அறிவித்து
தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பாதிக்கபட்ட மக்கள் பிரிவினருக்கு நிவாரணங்கள் அறிவிக்கின்ற போது...!
மத்திய அரசும்' மாநில அரசும் ' எந்த இடத்திலும் பெயருக்கு கூட மீனவர்கள் என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை என்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எனவே மத்திய மாநில அரசுகள் நாட்டுமக்களுக்கு புரதச்சத்து மிகுந்த உணவான கடல் உணவுகள் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும்... ஊரடங்கு சட்டத்தால் இயல்பு நிலையை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக
ஈரான் போன்ற வெளிநாடுகளுக்கும், கேரளா கர்நாடகா.. போன்ற வெளி மாநிலங்களுக்கும் பிழைப்புக்காக செல்கிற மீன்பிடிக் கூலிகள் தங்கள் வீடுகளுக்கு வந்து சேர முடியாமல் தவிக்கின்ற கொடுமை ஒருபுறம்.. மறுபுறம் அந்த குடும்பங்கள் வறுமையில் வாடுகிற அவலநிலை, இவைகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை...!
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் நமது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் அவல நிலையை போக்க வேண்டும்
தமிழகத்தில் மீன்பிடித் தொழில் செய்வதற்கு தேவையான எரிபொருட்களை மானிய விலையில் வழங்குவதல், சர்வதேச கடற்பகுதியில் வேற்று நாட்டினர் மிகப் பெரிய படகுகளில் மீன்களை அள்ளிச் செல்வதை தடுத்தல், மீனவர்கள் நிலையான வருமானத்தை உறுதிசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்று தமிழக மீனவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சிரமப்படுவதை விடுத்து உள்ளூரிலேயே தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்
தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்

உலக புத்தக தினம்
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.
புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது.
புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு யுனோஸ்கோ அமைப்பு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2019, ம் ஆண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது, இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டு புத்தக மாநாடு கொண்டாடப்பட உள்ளது.
எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குவை சுவர்களிலும் இஷாங்கோ (Ishango) எலும்புகளிலிருந்து தான் இவை சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன இதன் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக களிமண் கலவைகளாலும், மரப்பட்டைகளிலும், விலங்குகளின் தோளிலும் ஓலைச்சுவடிகளில்,காகிதத்ங்களில், எழுதப்பட்டது... இவை அனைத்துமே புத்தகங்கள்தான், வரலாற்று பதிவுகள்தான்.
அறிஞர்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது. நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.
அண்ணாதுரை
புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.
நேரு
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்'
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்:
'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது'
---
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது ?
'புத்தகம்'
உலகம் முழுவதும்
விஞ்ஞான வளர்ச்சி, மீடியாக்களின் தாக்கம் என்று பல்வேறு காரணங்களால் இன்று புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் கூட தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுகின்றனர். சமுக ஊடகங்கள் மூலம் உலகில் நடக்கும் நிகழ்வுகள் ஓரிரு நிமிடங்களில் தங்களது விரல் நுனிகளில் கிடைத்து விடுகிறது என்பது உண்மை. எனினும், புத்தகங்களை வாசிப்பதற்கும் சமூக ஊடகங்கள் மூலம் வாசிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதை ஊக்கப்படுத்த முழு அக்கறை காட்டவில்லை எனவும், பாடங்களை படிக்க மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை வெளியிட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், புத்தகங்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு செல்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தமிழகத்தில் புத்தக வாசிப்புக்கான நம்பிக்கையூட்டும் வகையில்.. எப்படி தொன்னுறுகளில் அறிவொளி இயக்கம் வாசிப்பின் மகத்துவத்தை கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சென்றதோ ....
அதேபோல்
கடந்த 10 ஆண்டுகளில்
பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன.
உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும்.
"அதற்கொரு நிபந்தனை". அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம்.

புதன், 4 மார்ச், 2020
வறண்டு போகும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்க்கை
வறண்டு போகும் உள்நாட்டு
மீனவர்கள் வாழ்க்கை
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக கடல் மீன்பிடிப்பை விட, உள்நாட்டு மீன்பிடிப்பு அதிகரித்து வருகிறது,
விவசாயத்தில் மரபியல் மாற்றம் செய்த பயிர்கள் மூலம் எப்படி சாகுபடியை உயர்த்த முயற்சி செய்தார்களோ' அதே போல் உள்நாட்டு மீன் உற்பத்தியிலும் மரபியல் மாற்றம் செய்யபட்ட மீன் இனங்களை அறிமுகம் செய்ததன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி உயர்ந்துள்ளது,
குறிப்பாக பிற மாநிலங்களை போல் நமது மாநிலத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை, நமது மாநிலத்தின் நீர் நிலைகள் பருவ மழையை நம்பியே உள்ளது,
நமது நீர் நிலைகள் குறுகிய காலத்திலேயே வற்றி விடும் தன்மை உடையது என்பதால் அதற்கு ஏற்றார் போல் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய, அமூர்கெண்டை (Amur carp) மரபுவழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேபியா (Generically improved formed tilapia) ஜெயந்திரோகு, கெளுத்தி வகையை சேர்ந்த பங்கேசியஸ், போன்ற மீன் இனங்கள் பெரும்பாலும் வளர்க்கபடுகிறது.
தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்கள் இருவகையில் உள்ளனர், முதல் வகையினர் அரசின் கட்டுபாட்டில் உள்ள நீர் நிலைகளில் குத்தகை மற்றும் கூலி அடிப்படையில் மீன் பிடிப்பவர்கள், இரண்டாவது வகை சொந்தமாக
குளம் ,குட்டை வைத்து மீன்வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருபவர்கள்.
மொத்தத்தில் உள்நாட்டு மீனவர்கள் தமிழகத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர் மொத்த உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் 314 உள்ளது , இதில் 303 ஆண்கள் கூட்டுறவு சங்கத்தில் 87399 பேர் உறுப்பினராகவும்,
11 பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் 8009 பேர் உறுப்பினராகவும், மொத்தத்தில் 95408 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
உள்நாட்டு நீர்வளம்
""""""""""""""""""""""""""""""""
தமிழ் நாட்டில் மீன் வளர்ப்பிற்கு உகந்த நீர் தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய பாசன குளங்கள் மற்றும் குட்டைகள்,
ஆறுகள், கழிமுகங்கள் மற்றும் இதர நீர் நிலைகளை உள்ளடக்கிய பல்வேறு உள்நாட்டு நீர் ஆதாரங்கள் 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
இதில் பொதுபணிதுறையின் கீழ் 78 நீர் தேக்கங்கள் உள்ளன, இதில் மீன் உற்பத்திக்காக 61 நீர்நிலைகளை தமிழ் நாடு மீன்வளத்துறை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுபாட்டிலும் நீர் நிலைகள் உள்ளன ,
இவற்றில் லட்சக்கணக்கான ஏழை எளிய மீனவர்கள் நேரடியாகவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலமாகவும் குத்தகைக்கு எடுத்து மீன்பிடி மற்றும் மீன்பாசி எடுத்து வருகின்றனர்,
இச்சூழலில் தமிழக அரசு 2011 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் அரசின் நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏல முறைக்கு கொண்டு வந்துது , இதன் விளைவாக உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள், பண முதலைகள் கைவசம் அரசின் நீர் நிலைகள் சென்றது, பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த மீனவர்கள் புதிய குத்தகைதார்களின் கட்டுபாட்டுக்குள் சென்று ஒட்ட சுரண்டபட்டனர், பல்வேறு இடங்களில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கபட்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் குரல் கொடுத்து,
கடந்த 2014 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர்
கே.பாலகிருஷ்ணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதில் கூறிய அன்றைய மீன்துறை அமைச்சர்
திரு ஜெயபால் அவர்கள் தனியாரின் வசம் குத்தகைக்கு நீர் நிலைகளை கொடுத்தாலும் அதில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்பட்ட மாட்டார்கள் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என உறுதியளித்தார், ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கவில்லை, தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை,
லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தனியாருக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் பெரிய வருவாய் அரசுக்கு வரவில்லை, இதுவரை அரசின் நீர் நிலைகள் ஐந்து வருட காலம்
குத்தகை மூலம் 35 நீர் நிலைகள் ஏலம் விடபட்டு வெறும் 30.75 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது
அரசின் மெத்தனம்
"""""""""""""""""""""""""""""""
நீலபுரட்சி, தேசிய மீன்வள கொள்கை, என அரசு பல்வேறு பெயர்களில் திட்டம் வகுப்பதாக கூறினாலும்,
இத் திட்டங்கள் யாவும் உள்நாட்டு மீனவர்களுக்கு பலண் அளிக்கவில்லை, குறிப்பாக உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன் குஞ்சுகள் உற்பத்தி போதுமானது அல்ல, பருவமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும் உரிய காலத்தின்
போது மீன் குஞ்சுகள் கிடைப்பது இல்லை ,
மீன் குஞ்சுகள் தயாராக இருக்கும் போது நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு போகிறது. மேலும்
மீன்களுக்கனா இரை தட்டுப்பாடு, மீன்களுக்கான இரை விலையேற்றம், மீன்களை தாக்கும் நோய் காரணிகள், ஆகியவற்றால் உள்நாட்டு மீன் உற்பத்தி கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழக நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் உள்நாட்டு மீன் 4 50 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியும், இது தமிழ் நாட்டின் கடல் மீன் உற்பத்திக்கு இனையானது ஆகும்,
மேற்கண்ட
இலக்கை எட்ட 70 கோடி மீன் குஞ்சுகள் தேவை, மீன்துறைக்கு ஒதுக்கபட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை பயன்படுத்தி
2016-17 ம் ஆண்டு 64 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யபட்டது, 6 கோடி மீன் குஞ்சுகள்தான் ஒட்டு மொத்த தேவைக்கு குறைவாக உள்ளது, கடந்த காலங்கங்களை விட மீன் குஞ்சுகள் உற்பத்திகாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தேவையை பூர்த்தி செய்ததாக, மீன்துறை நிர்வாகம் கூறினாலும், இந்த ஆண்டு மீன் உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது,
கடந்த 2015-16 ம் ஆண்டு தமிழக உள்நாட்டு மீன் உற்பத்தி 2.42 லட்சம் டன், இந்த ஆண்டு 2016-17 ல் 1.97 லட்சம் டன் உற்பத்தி ஆகி உள்ளது, இது கடந்த ஆண்டைவிட 0.45 லட்சம் டன் குறைவான உற்பத்தி ஆகும்.
இதன் காரணமாக தமிழ் நாட்டு மக்களுக்கான மீன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டவதுடன் , உள்நாட்டு மீனவர்கள் தங்கள் வாழ்நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
சமூக நல திட்டங்கள் புறக்கணிப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீன்துறை வளர்ச்சிக்கென மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டங்களை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் உள்நாட்டு மீனவர்களையும் இனைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது தமிழகத்தில்தான் உள்நாட்டு மீனவர்களை எவ்விதமான சமூகநல திட்டங்களிலும் சேர்க்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக கடல்சார் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்ட நடவடிக்கையின் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது, இத்திட்டங்கள் அனைத்திலும் உள்நாட்டு மீனவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதே நியாயம்,
குறிப்பாக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கபட்டு 61 நாட்கள் வேலையின்றி இருக்கும் மீனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு தமிழக அரசு தலா ரூ 5000 ம் வழங்குகிறது.
அதுபோல் இரண்டாவது திட்டமாக மீன்பிடி குறைவு கால நிவாரணம் கடல் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 5000 வீதம் வழங்குகிறது, மேற்கண்ட இரண்டு நிவாரண திட்டங்களும் கடல் மீனவர்களுக்கு போதுமானது இல்லை.
ஆயினும் அத்திட்டம் உள்நாட்டு மீனவகளுக்கு வழங்குவது இல்லை,
அதற்கு அரசு கூறும் காரணம் உள்நாட்டு மீனவர்களுக்கு கடல் மீனவர்களை போல் மீன்பிடி தடைகாலம் இல்லை என்பதே, ஆனால் உன்மை நிலவரம் என்னவென்றால் வருடத்தில் ஆறுமாதங்கள் மட்டுமே நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும், கோடை காலங்களில் "அறிவிக்கபடாத மீன்பிடி தடைகாலத்தை" வறட்சி உருவாக்கிவிடுகிறது எனவே உள்நாட்டு மீனவர்களையும் மேற்கண்ட நிவாரண திட்டங்களில் இனைக்கபடுவதே நியாயம்.
தேசிய மீனவர் சேமிப்பு நிதி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஏற்கனவே கூறிய இரண்டு திட்டங்களும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது, மூன்றாவதாக உள்ள தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம் என்கிற
இத்திட்டமானது மத்திய மாநில அரசுகள் கூட்டாக சமவிகித பங்களிப்போடு அமுல்படுத்தி வரும் திட்டமாகும்,
இதன்படி ஒவ்வொரு மீனவர்களும் மாதம் ஒன்றிற்கு ரூ 175/ வீதம் 8 மாதங்களும், 9 வது மாதம் ரூ 100 / ம் ஆகமொத்தம் ரூ 1500 செலுத்த வேண்டும், இத்தொகையுடன் மத்திய அரசு ரூ 1500/ ம், மாநில அரசு ரூ 1500/ ம் சேர்த்து ரூ 4500 /, யை மீனவர்களுக்கு பட்டுவாடா செய்வார்கள்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பருவ காலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ,ஆகிய மூன்று மாதங்களிலும் இதர பல மாநிலங்களில் வேறு பல மாதங்களிலும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் அத்துடன் மழை புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழும், இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது, இதுபோன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம்,
இந்த திட்டத்திலும் உள்நாட்டு மீனவர்கள் முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளனர். கடல் மீனவர்கள் படும் துன்பதுயரம் அனைத்தும் உள்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும் என்பதால்தான், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு வெளியிட்டுள்ள
நீல புரட்சிகான மத்திய அரசின் வழிகாட்டும் திட்ட ஆவணத்தில், தேசிய மீனவர் மறுவாழ்வு திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் 22 ம் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது Saving cum Relief (for both inland and marine fishres ) மத்திய அரசின் இத்திட்டம் உள்நாட்டு மீனவர்களுக்கு சேர்த்தே' உருவாக்கப்பட்டது என்பதுதான் இதன் அர்த்தம் ஆனால் நமது தமிழக அரசு நமது உள்நாட்டு மீனவர்களை இத்திட்டத்தில் சேர்க்க மறுத்து வருகிறது.
மத்திய அரசு கூறியுள்ள அடிப்படையில்
இத் திட்டத்தை அமல்படுத்தி வரும் அண்டை மாநிலமான கேரள மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மாநிலங்களில் கடல்சார் மீனவர்களுடன் உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விதமான சமுக திட்டங்களும் உள்நாட்டு மீனவர்களுக்கு செயல்படுத்தததால் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் பயனற்று கிடக்கிறது , நாட்டிற்கு புரதசத்து மிகுந்த உணவை உற்பத்தி செய்து தரும் உள்நாட்டு மீனவர்கள் சோர்வுற்று அவர்கள் வாழ்கை எப்போதுமே வறண்டு கிடப்பது நியாயம் இல்லை.
எனவே கடல் மீனவர்களுக்கு வழங்கபடும் சமுக நல திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்.
இராமேஸ்வரம்
தொடர்புக்கு : 9940817745

சாகர்மாலா , நெய்தல் குடிகளின் பேரழிவு திட்டம்

"""""""""""""""""""""""""""""""""""""""""
வறுமையில்
வாடும் 30 கோடி இந்திய மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத மோடி, அன்னிய மற்றும் இந்திய கார்பரேட்களின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும் நோக்குடன், மேக் இன் இந்தியா, ஸ்டார் ஆப் இன்டியா, தூய்மை இந்திய, ஸ்கில் இன்டியா, இதன் வரிசையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டுவரபட உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் திட்டம்தான் சாகர்மாலா ( கடல் மாலை ) திட்டம். சீனாவின் முத்துமாலை திட்டத்தை காப்பியடித்து செய்யபடுகிறது.
இத்திட்டம் 2003 ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் முன்மொழியபட்டு கிடப்பில் போடப்பட்டது, தற்போது 2015 மார்ச் 25 ல் மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதனை அமுல்படுத்தும் போது வரும் எதிர்ப்பை சமாளிக்க ஓர் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என்ற முறையில், சாகர்மாலா உச்சநிலை கமிட்டி (SAGAR MALA APEX COMMITTEE )அதன் கீழ் சாகர்மாலா டெவலப்மென்ட் கம்பெனி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதை இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதியபட்டது, இந்த அமைப்புக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார்,
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பாதிக்கப்படும் மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க வலிமை மிக்க அமைப்பாக சாகர்மாலா கம்பெனி அமையும், இதில் மத்திய
மாநில அரசுகளோ கீழ்மட்ட அரசின் நிர்வாகங்களோ தலையிட முடியாத
வகையில், கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இக் கம்பெனியை அமைத்தது மத்திய அரசாக இருந்தாலும், இந்த கம்பெனியை இனிமேல் நிர்வகிக்க போவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், அரசு
ஒரு குறைந்த அளவு முதலீடு
செய்து விட்டு அதில் கிடைக்கும் லாபத்தில் முதலீட்டுகான பங்கைப் ஒரு பங்குதாரர் என்ற முறையில் அரசு பெற்று கொண்டு ஒதுக்கி விடும் முழுக்க முழுக்க அன்னிய இந்திய மூலதனத்தில்தான் இக்கம்பெனி செயல்படும், இதில் கிடைக்கும் லாபத்தையும் துறைமுக சேவைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் கம்பெனி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பெயரளவில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார் ஆனால் பெரு முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர்களே கம்பெனியை வழிநடத்துவார்கள், கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியை எப்படி வடிவமைத்து அதிகாரம் வழங்கியதோ, அதே முறையை பின்பற்றி சாகர்மாலா கம்பெனிக்கும் இந்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திம் நான்கு அம்சங்களை கொண்டது, ஒன்று பழைய துறைமுகங்களை நவீனமாக்குவது , புதிய துறைமுகங்களை உருவாக்குவது ,
இரண்டு வான்வழி, தரைவழி. நதிவழி, ரயில்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது ,
மூன்று துறைமுகம் சார்ந்த ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார மண்டலம் அமைப்பது.
நான்கு கடல்சார் சமூகங்களின் மாற்று வாழ்வாதார திட்டம் குறித்து.
இத்திட்டத்தை நிறைவேற்ற மொத்தத்தில் எட்டு லட்சம் கோடி தேவை எனவும், இத்திட்டம் நிறைவேற்றினால் 2020 க்குள் ரூ 110 பில்லியன் அளவுக்கு சரக்கு ஏற்றுமதியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் 400 மேற்பட்ட திட்டங்கள் உள்ளது, நாற்பது லட்சம் பேருக்கு நேரடியாகவும் அறுபது லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்குமென ஆசை வார்த்தை கூறபடுகிறது,
துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவது
""""""""""""""""""""""""""""""""""""""""""
துறைமுகங்களை மேம்படுத்துவதே
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அறிக்கை கூறுகிறது ,
அதனடிப்படையில் ரூபாய் 91434 கோடி முதலீட்டில், 12 பெரிய துறைமுகங்களையும் , 142 சிறிய துறைமுகங்களையும் , நவீனபடுத்தி சர்வதேச தரத்திற்கு சரக்கு பெட்டகங்களை கையாள்வது, இதன் தொடர்ச்சியாக
மராட்டிய மாநிலத்தில் வதவன், கர்நாடக மாநிலத்தில் பெலிகிரி, தமிழகத்தில் இணையம் தற்போது குளச்சல் கோவலம், மற்றும் சீர்காழி, ஒரிசாவில் பாரதீப் வெளி துறைமுகம், மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, உள்ளிட்ட
ஆறு புதிய துறைமுகங்கள் அமைப்பது இதற்கான ஒப்புதலை 5-7-2016 ல் மத்திய அரசு வழங்கியது.
புதிய துறைமுகங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்பது உன்மையே, ஆனால் அவற்றை அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் செய்யும் போது தான் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுபாட்டில் துறைமுகங்கள் செல்லும் என்றால், நாட்டில் உள்ள சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் மண்டியிட்டு கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு வழிகோலாது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும், இந்திய துறைமுகங்களை நேரடியாக தனியாரிடம் தாரைவார்க்காமல், கொல்லைபுறம் வழியாக தனியார் வசம் கொடுப்பதே சாகர்மாலா திட்டம் என்கிற சாகசம், சாகர்மாலா கம்பெனிக்கு பின்னால் ஒழிந்திருக்கும் கார்ப்ரேட்டுகள் புதிய துறைமுகங்களை அமைக்கவும், பழைய துறைமுகங்களை நவீனமாக்கும் நடவடிக்கை என்கிற பெயரில் முதலீடு செய்து நாட்டில் உள்ள அனைத்து துறைமுக கட்டமைப்பை தங்கள் வசம் கொண்டு செல்ல எடுக்கப்படும் நவீன உத்தியே சாகர்மாலா திட்டம்.
துறைமுகங்கள் இணைப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இருப்புபாதை , தரைவழி, வான்வழி, உள்நாட்டு நீர்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது
இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய நோக்கம் என்கிறது திட்ட அறிக்கை, இதில் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் சாராமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில், இந்திய துறைமுக ரயில்வே கம்பெனி என்ற நிறுவனத்தை 10 -7-2016 அன்று துவங்கி,
அதை இந்திய கம்பெனி சட்டம் 2013 கீழ் பதிவு செய்து தற்போது 9 துறைமுகங்களை இணைக்கும் வகையில் 3300 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்புபாதை அமைக்க 25 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது,
இவற்றை நிறைவேற்ற தேவையான ரூ 28000 கோடி முதலீடை அன்னிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் திரட்ட போவதாக திட்ட அறிக்கை கூறுகின்றது .
சாலைகளை புதிதாக அமைத்தல், விரிவுபடுத்துதல் என்ற வகையில் 79 சாலைகள் சாகர்மாலா திட்டத்தின் கீழும், 45 திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை கொண்டு வந்துள்ள பாரத்மாலா திட்டத்தின் மூலமாக செய்யபடும் என அறிக்கை கூறுகின்றது.
இத்துடன் எரிவாயு மற்றும் எாிபொருள் போன்ற திரவ பொருட்களை நாடு முழுக்க கொண்டு செல்ல குழாய் அமைப்பது.
குறிப்பாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்கு பெட்டகங்களை கையாள்வது, காரணம் தரைவழியை விட நீர்வழி போக்குவரத்து, பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால், மத்திய மோடி அரசு கடந்த 10-3-2016 அன்று உள்நாட்டு நீர்வழி மசோதா 1982 யை திருத்தம் செய்து, தேசிய நீர்வழி மசோதா 2016, என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது,
ஏற்கனவே இந்தியாவில் கங்கை, பாகிரதி, ஹீக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ண -கோதாவரி, நதிகள் கேரளத்தில் உள்ள சம்பகார மற்றும் உத்யோக் மண்டல கால்வாய் உள்ளிட்ட ஐந்து வழி தடங்களில் உள்நாட்டு போக்குவரத்து உள்ளது .
இந்த ஐந்து வழி தடங்களை மேம்படுத்துவது, அத்துடன் புதிதாக 106 நதிகளையும் உள்ளடக்கி, 111 நதிகளில்
உள்நாட்டு போக்குவரத்தை துவங்குவது என மசோதா கூறுகிறது, இதனடிப்படையில், தமிழகத்திலுள்ள கீழ்கண்ட ஏழு நதிகளில் உள்நாட்டு நீர்வழி தடம் அறிவிக்கப்பட்டுள்ளது,
1, காவிரி-கொல்லிட நதிகளில் , ஈரோடு மாவட்டம் உரச்சிகோட்டை துவங்கி, நாகை மாவட்டம் பழையாறு கடற்கரை வரையிலும்,
2, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை துவங்கி அம்பாசமுத்திரம் அலயூர் வரையும்,
3, பாலாற்றில் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ரயில்பாலம் துவங்கி , காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்க பட்டிணம் கடற்கரை வரை.
4,பழையாற்றில் குமரி மாவட்டம் வீரநாராயணமங்களம் துவங்கி மணக்குடி கடற்கரை வரை.
5, பொன்னி ஆற்றில் சாத்தனூர் அணை முதல் கடலூர் துறைமுகம் வரை,
6, தாமிரபரணி ஆற்றில் நெல்லை நகரில் துவங்கி , தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கடற்கரை வரை,
7, வைகை நதியில் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி முதல் மதுரை மாவட்டம் விரகனூர் வரை.
மேற்கண்ட நீர்வழி பாதைகள் சாதாரண மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டமில்லை, முழுக்க முழுக்க இந்திய மற்றும் பன்னாடு நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது,
இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யவில்லை, விவசாயிகள் பாசனங்களுக்கு நீரை பயன்படுத்துவதில், உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பு செய்வதிலும் ஏற்படும் சிரமங்களை பற்றி அறிக்கையில் எதுவும் கூறவில்லை,
இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் மாட்டார்கள்
மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்தார் , இதன் உள்ளடக்கமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை மற்றும் நதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியே ,
நாட்டில் உள்ள நதிகளின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமைகளையும், மோடி அரசு ஒரே ஒரு மசோதாவான உள் நாட்டு நீர்வழி மசோதா மூலம் பறித்துக் கொண்டது,
கடற்கரைசார் தொழில் மண்டலம்
"""""""""""""
தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்,
சாகர்மாலா திட்டத்தின்
தொடர்ச்சியாக மிக முக்கியமான ஒன்றாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடற்கரையோர சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
இந்தியாவில் 14 மண்டலங்கள் அமைக்கபடவுள்ளது , அதில் மூன்று மண்டலம் தமிழகத்தில் அமையவுள்ளது.
1,மன்னார் வளைகுடா மண்டலம், தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கியது.
2, பூம்புகார் மண்டலம், கடலூர் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில், கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஐ உள்ளடக்கியது,
3, VCIC தென் மண்டலம், ( VENTURE CAPITAL INVESTMENT COMPETITION )
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர் , காஞ்சீபுரம் மாவட்டங்களைச் உள்ளடக்கியது,
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை தவிர தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை இதில் விடுவிக்க காரணம் இப்பகுதியில் ஆதம் பாலம் உள்ளது, மணல்மேடுகள் கடலில் அதிக அளவில் உள்ளது, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாமல், இப்பகுதியில் கப்பல்கள் வரமுடியாது அதனால் விட்டுவிட்டனர். இந்தியாவில்
மொத்தம் உள்ள 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் கிட்டதட்ட இந்தியாவின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்கரை பகுதியை ஆக்கிரமிக்கிறது
கடற்கரை சமூகத்தினர் குறித்து
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இறுதி அத்தியாயத்தில் கடற்கரை சமூகத்தினர் குறித்து கூறப்பட்டுள்ளது? முதலாவதாக தேசிய அளவில் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை புள்ளி விபரங்களுடன் கூறுகிறது.
நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரைகளில் வசிக்கின்றனர். 2010 கடற்கரை மீனவர்கள் கணக்கெடுப்பின் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்களை வாங்கி மீள முடியாத கடன் வலைகளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது, 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்கு பஸ் வசதிகள் உள்ளன.
மீனவர்களின் அவல வாழ்வு குறித்து இவ்வளவு துல்லியமான புள்ளிவிபரங்களைக் கூறும் சாகர்மாலா தேசிய கண்ணோட்டத் திட்டம் அவர்களை முழுமையாக அழிக்கப்படபோவது குறித்து மௌனம் சாதிக்கிறது. சாகர்மாலா திட்டத்திற்கு இடையூறாக, பெரும் தடைக்கற்களாக மீனவர்கள் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்கள் (critical stakeholders) என்ற நாகரீகமான வார்த்தையின் மூலம் ஆவணம் முன்வைக்கிறது. துறைமுகம் கட்டுவதினாலும் அதன் செயல்பாடுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. துறைமுக வளர்ச்சித் திட்டங்களினால் மறைமுக பாதிப்புகள் என மக்கள் இடம் பெயருதல் , கடற்ரைகள் இழப்பு, கடலுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல முடியாத நிலை மற்றும் மோசமான மறுவாழ்வு திட்டங்கள் என ஒரு சிறிய பத்தியில் போகிறபோக்கில் இத்தகைய மிகக் கடுமையான பாதிப்புகள் கூறப்பட்டுள்ளன.
திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அழிப்பதற்கு நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப்போவதாக அறிவித்துள்ளதை தவிர ஆவணத்தில் வேறு ஒன்றும் சொல்லவில்லை,
கடலோர சமுக மக்களின் மாற்று வாழ்வாதார திட்டம் எதுவும் இல்லாத நிலையில்
சாகர்மாலா
திட்டத்தில்
கூறப்பட்டுள்ள 3 திட்டங்களின் ( துறைமுகம் நவீனப்படுத்துதல் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு) இதில்
ஏற்படவுள்ள வளர்ச்சியின் பயன்களை கடலோர சமுக மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் ஏமாற்றமளிப்பாக உள்ளது.
பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?
சாகர்மாலா ,
இந்திய கார்பரேட்களின் நீண்ட கால கனவு திட்டம், மோடி தலைமையிலான பிஜேயை. ஆட்சியில் அமர வைத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு . மோடி அரசு. திரும்ப செய்யும் கைமாறு, கடல்சார் பழங்குடியின மக்களின் மீது தொடுக்கபட்ட மாபெரும் தாக்குதல்,
எனவே சாகர்மாலா போன்ற அழிவு திட்டங்களுக்கு எதிராக நெய்தல் நில மக்கள் நடத்தும் போராட்டங்களில் இதர பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவாக அணிதிரள வேண்டுகிறேன், இது கடலோர சமுக மக்களின் பிரச்சினை மட்டுமல்ல இது தேசத்தின் பிரச்சினை.
கட்டுரையாளர்:
சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொலைபேசி 9940817745

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
காரல்மார்க்ஸ் ஜென்னி காதல்
மார்க்ஸ் ஜென்னி
அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது."
-மார்க்ஸ்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பண்டைய கால அன்னம் விடு தூது துவங்கி..மத்திய காலத்தில் கடிதம் என...தொடர்ந்து இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ்அப் எஸ்.எம்.எஸ் வீடியோ கால் என காதலை பரிமாறிக் கொள்ளும் வடிவங்கள், பல்வேறு பரிமாணங்களை பெற்று வந்துள்ளன.. ஆயினும் இன்றைய மத்திய வயது உள்ள தலைமுறை கடிதப் போக்குவரத்தையும், டிஜிட்டல் யுகத்தையும் அனுப அனுபவித்தவர்கள்
குறிப்பாக காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள கடிதம் அனுப்பும் முறை மிகவும் சுவாரசியமானது "காத்திருப்பு "எதிர்பார்ப்பு என மகிழ்ச்சி நிறைந்த தருணங்களை வார்த்தையால் சொல்ல முடியாது வைரமுத்துவின் கவிதை வரிகள் சொன்னதை போல் "தபால்காரன் தெய்வமாவான்" என்கிற வாசகம் காதல் கடிதத்தை எதிர்பார்த்திருக்கும் ஒரு காதலனுக்கு தான் தெரியும் இது சாமானிய மனிதனுக்கு மட்டுமல்ல இந்த உலகை மாற்றியமைக்க ஒரு புரட்சிகர தத்துவத்தை எழுதிய மார்க்ஸின் வாழ்க்கையில் இதுபோன்ற சுவாரசியங்கள் நிறைந்திருக்கும்
காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.
பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். ஆனால் ஜென்னியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜென்னி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் ஜென்னிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜென்னிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜென்னியின் பதில் கடிதத்திற்காக காத்திருப்பார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.
மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜென்னியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜென்னி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். நீங்கள் நினைப்பது போன்று இவர்கள் குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை.
ஜென்னியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார். இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜென்னியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜென்னியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜென்னியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.
இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும்.
ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள்.
ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார். ஓர் ஆண்டோ... ஈராண்டோ அல்ல... ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர்.
எவர் சொல்லியும் மனந்தளராமல் இருந்த ஜென்னிக்கு... அவருடைய காதல் நாயகனிடமிருந்து வந்திருந்தன காதல் கடிதங்கள். அதில் ஒன்றை எடுத்து அவர் படித்தபோது... அவருடைய காதல் வலிக்கு அந்தக் கடிதம் மருந்திட்டிருந்தது.
"இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும்
காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்"
என்று வடித்திருந்த வரிகளால் ஜென்னியின் மனம் நிறைவடைந்தது.
மார்க்ஸை மணந்து, அவர் மனம்கோணாதபடி ஜென்னியும் இணைந்திருந்ததால்தான் கார்ல் மார்க்ஸால் வரலாற்றில் இடம்பிடிக்க முடிந்தது. தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ்
'உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது.
எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால்
போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு,
எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது''
என வேதனையுடன் கடிதம் எழுதினார்.
ஜென்னியும் தன் கணவருக்குத் துணையாக... அவருடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதமாகக் கடிதம் எழுதுவார். இதேபோன்று, ஒருமுறை அவர்கள் இருவரும் பிரிந்திருந்த நேரத்தில்,
''...மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் லேசாக எழுதுங்கள். அன்பே... உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடையாது''
என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.
மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். குழந்தைகளை வறுமைக்கு இரையாக்கிய துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.
1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.
“என் அன்பிற்கினியவளே,
நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது…. "
"எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே நீடிப்பார்கள்."
"…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் என் காதலுக்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது."
"அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே…."
“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”
வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.
இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும் இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர்கள். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல், அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. . அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்திவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார். அதன் பின்னரும் சமூகத்துக்காக போராடவேண்டும் என சமூகப்பணிக்கு வந்திருக்கிறார் இருந்தாலும் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான ஹெங்கல்ஸ் கூறுகிறார்," ஜெனி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்" என்று. ஒருவேளை தன் பாலிய வயதில் ஜெனியிடம் உரையாடிய ஷேக்ஸ் ஸ்பியர் காதல் கதைகளை கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ? தன்னை விட நான்கு வயது பெரியவரான ஜெனி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், " நான் உன்னை குழந்தையாக இருக்கும்பொழுதிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்" என்று. மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமாக இருந்ததோ, அதேபோல ஜெனியும் ஒரு காரணமே...

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)