உலக கடல் தினம்
நம் வாழும் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஜனை கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்று கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. நமக்குத் தேவையான பெருமளவு உணவு, நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது.
மருந்துகள், உயிரின வளம் கடலிடமே இருக்கிறது. இத்தகைய பெரும் அருமைகளைக் கொண்ட `உலகப் பெருங்கடல் தினம்' இன்று.
பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கண்களைக் கடல் வளம் உறுத்தியது, இதன் விளைவாகப் பாய்மரப் படகுகள் உலாவந்த கடலில் பகாசுர கப்பல்கள் அணிவகுத்தன. கொஞ்சம் கொஞ்சமாக பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக கடல் மாறியது. மொத்த கடல் மீன் வளத்தில் 52 சதவிகிதம் சுரண்டப்பட்டுவிட்டது. கடலையே நம்பி இருந்த பழங்குடியின மக்களின் கடலும் கடல்சார் நிலமும் பறிக்கப்பட்டன. எனவே, உலகமயச் சுரண்டலின் கரங்கள் உலகளாவிய அளவில் விரிந்து பரந்து கிடக்கும்போது அதை எதிர்க்கும் போராட்டமும் உலகளாவிய அளவில் தேவை என்று உணர்ந்தனர். எனவே, கடல் உலகின் பொதுச் சொத்து. அதை சிலரின் ஏகபோக உரிமைக்கு அனுமதிக்க முடியாது என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியது,
உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் ஜூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம்ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக இந்நிகழ்வுக்கான கோரிக்கையை உலகின் பல நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.
பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் கடல்களால் நாம் பெறும் பயன்களை அளவிட்டுப் பார்க்கவும், அவை நமக்கு வழங்கும் கடல் உணவு வகைகள், மீன்கள், மதிப்புமிக்க பொருள்களையும், அவற்றின் பயன்களையும் நினைத்துப் பார்க்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
புவியின் மேற்பரப்பிலுள்ள கடல்கள் தனித்தனியானவை எனக் கருதப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்து மகா கடல், அண்டார்டிக் கடல், ஆர்டிக் கடல் என ஐந்து பெருங்கடல்கள் உலகில் உள்ளன.
கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர நிலத்தால் சூழப்பட்ட சில பெரும் உப்பு நீர்நிலைகளும் நம் உலகில் உள்ளன (காஸ்பியன் கடல், சாக்கடல்).
இவற்றில் பூமியின் பாதி நீர்பரப்பை பசிபிக் பெருங்கட்ல் ஆட்கொண்டுள்ளது.
கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர பவளப்பாறைகள் பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால் ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன. உலகில் 10 கோடி பேர் உணவு வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.
இவற்றில் பூமியின் பாதி நீர்பரப்பை பசிபிக் பெருங்கட்ல் ஆட்கொண்டுள்ளது.
கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர பவளப்பாறைகள் பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால் ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன. உலகில் 10 கோடி பேர் உணவு வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.
கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட,
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கடல் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும், மக்களின் போக்குவரத்தும் அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் நாகரிகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கின்றன. சமீப காலமாக கடற்கரைப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில், கடல் சார்ந்த பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
கனடா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிக நீளமான கடற்கரை பகுதிகளைக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் அடங்குகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் முதல் இருபது நாடுகளுக்குள் இடம்பெறுகின்றன. இந்த நாடுகளில் கடல் வளத்தின் மூலம் பொருளாதாரப் பயன்களை அடைவதற்கான வாய்ப்புகள் பெரும் அளவில் உள்ளன.
கனடா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிக நீளமான கடற்கரை பகுதிகளைக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் அடங்குகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் முதல் இருபது நாடுகளுக்குள் இடம்பெறுகின்றன. இந்த நாடுகளில் கடல் வளத்தின் மூலம் பொருளாதாரப் பயன்களை அடைவதற்கான வாய்ப்புகள் பெரும் அளவில் உள்ளன.
அதே நேரத்தில் முதலாளித்து லாப வெறிக்கு அதிகம் பலியாவது கடலின் இயற்கை சூழல்தான்.
பூமியின் குப்பைத் தொட்டிபோல் கடல் பயன்படுத்தப்படுகிறது.
கடலில் ஏராளமான கழிவு நீர் கலக்கின்றது. கடலோர நகரங்களில் வசிக்கும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ரசாயனத் தன்மை மற்றும் நச்சுத் தன்மை கொண்ட கழிவு நீர் போன்றவை கடலில் கலக்கும்படி விடப்படுகின்றன.
பூமியின் குப்பைத் தொட்டிபோல் கடல் பயன்படுத்தப்படுகிறது.
கடலில் ஏராளமான கழிவு நீர் கலக்கின்றது. கடலோர நகரங்களில் வசிக்கும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ரசாயனத் தன்மை மற்றும் நச்சுத் தன்மை கொண்ட கழிவு நீர் போன்றவை கடலில் கலக்கும்படி விடப்படுகின்றன.
குறிப்பாக, பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்கள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இதுபோன்ற குப்பைகளை கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன.
இதில் பாதிப்படையும் மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களும், வேறு சில அரிய வகை உயிரினங்களும் இறக்கின்றன.
சரக்குக் கப்பல் போக்குவரத்தின் போது அவற்றில் இருந்து கசியும் நச்சுப் பொருள்களாலும் கடல் சூழல் மாசடைகிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் இருந்து அவை கடலில் கொட்டியபடி செல்வதும், கசிவதும் நிகழ்கின்றது. இவற்றால் கடல் நீர் அதிகளவில் மாசடைகிறது.
உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 706 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கலப்பதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் 50% கரைகளில் ஒதுங்குகிறது.
முதலில் கடலின் மேல் மட்டத்தில் பரவும் எண்ணெய் படலம், சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு பரவி, கடல்நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது.
கடலில் பரவும் எண்ணெய் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறது. ரசாயனத் தன்மை கொண்ட எண்ணெய் படலம், கடலில் கலக்கும்போது அதன் விஷத்தன்மை பல்வேறு கடல்வாழ் உயிரினங்களைத் தாக்குகிறது.
கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் கிணறு துரப்பண பணியின்போதும் மாசு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கிணறு துரப்பண பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
பல நாள்களுக்குத் தொடர்ந்த இந்த எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்த வல்லுநர்கள் கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறக்கவும், நோயுறவும் நேரிட்டது
வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இந்த நிலை என்றால், வாளியை வைத்து எண்ணெய் கசிவை அள்ளும் நம் இந்திய தொழில் நுட்பத்தை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
அதுபோல் கடல் பகுதியில் பவளப்பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிலப்பகுதியில் மரங்களை வெட்டினால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதோ, அதுபோல் பவளப் பாறைகளை வெட்டியெடுக்கப்படுவதால் கடல் பகுதியில் சூழல் பாதிக்கப்படுகின்றது.
இந்தியாவில் சுண்ணாம்பு தயாரிப்புக்காக ஆண்டுதோறும் 25,000 டன் பவளப்பாறைகள் சட்ட விரோதமாக வெட்டியெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெருமளவு பவளப்பாறைகள் அழிந்து விடும் என கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் அணுக் கழிவின் பெரும்பகுதி கடலில்தான் கொட்டப்படுகிறது, அளவுக்கு அதிகமான மீன் இனங்களைப் பன்னாட்டு பகாசுர மீன்பிடி கப்பல்கள் வரைமுறையற்ற வகையில் பிடிப்பதாலும் பெரும்பாலான கடல் உயிரினங்கள், மீன்களின் தொகை அதிவேகமாகக் குறைந்துவருகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகளின் அழிப்பு போன்ற சூழல் பிரச்னைகளின் வரிசையில் இன்று பலராலும் பேசப்படும் மிக முக்கியமான பிரச்னையாக மிகை மீன்பிடி கருதப்படுகிறது.
தொன்று தொட்டு நடைமுறையிலிருந்து வந்த மீன்பிடிக் கைத்தொழில், வர்த்தகமயம் ஆக்கப்பட்டு வந்ததனால் உருவாகிய விளைவே இந்த மிகை மீன் பிடியாகும்.இதன் காரணமாக 2050-ம் ஆண்டளவில் உலகின் மீன் வளம் தீர்ந்துபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் லட்சக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்து பலகோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர். ஆனால் இவர்கள் கடலிலும், கரையிலும் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களது பல விதமான நீண்டகால பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீனவர்களுக்கென்று மத்திய அரசில் தனி அமைச்சகம் அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நீண்ட கால கோரிக்கை. தமிழக மீனவர்களும் இதற்காக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்கின்ற மீனவர்களை மீட்க முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் ஏக்கங்களை தீர்க்க வேண்டி தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கும் முயற்சியை மத்திய மாநில அரசுகள் செய்து வந்தன. 2004 சுனாமி பேரழிவுக்கு பின் மீனவர்களின் பாதுகாப்பு என்கிற பெயரில் குறிப்பாக கடற்கரை ஒழுங்குமுறை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றி மீனவ சமுதாய மக்களை அச்சுறுத்தி அவர்களின் கடற்கரையோர வாழும் உரிமையை பறித்துவிட்டு, பெருமுதலாளிகளின் ரசாயன தொழிற்சாலைகள், உல்லாசவிடுதிகள். ஆடம்பர சொகுசு பங்களாக்களை,கடற்கரையோரங்களில் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.சாகர்மாலா போன்ற பிரமாண்டமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களின் தொடர்ச்சியாக கடற்கரையோரங்களில் வரவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் புதிய துறைமுகங்கள் மீனவர்களின் வாழ்வுரிமையை அச்சுறுத்தி வருவதுடன், கடல் மற்றும் கடல்சார் நிலத்தின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பெருங்கடல்கள், சிறு கடல்களின் பெருமையை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம். ஏகாதிபத்திய சுரண்டலிருந்து மீனவப் பழங்குடிகளின் சொத்தான கடலை பாதுகாக்க உறுதி ஏற்போம்''
தோழமையுடன்
சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீன்வத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொடர்புக்கு. 9940817745
சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீன்வத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொடர்புக்கு. 9940817745

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக