உலக அகதிகள் தின சிறப்பு கட்டுரை
--சி.ஆர்.செந்தில்வேல்
உறவுகளை இழந்த மனிதன் அனாதை!
சொந்த தேசத்தை இழந்தவன் அகதி!
எனக் கூறுவார்கள்.
ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்கா அகதிகள் தினமாகத்தான் நினைவு கூரப்பட்டது.. பின்னர் இத்தினமானது 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆப்பிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.
தாய்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தினமும் சராசரியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300. இப்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
போர் என்பது ஒருபுறம் இருக்க, வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் இடம் பெயர்பவர்களும் உண்டு. இவர்களில் பலரும் தங்கள் நாட்டிலேயே உள்ள வேறு பகுதிக்கு இடம் பெயர்வதுதான் வழக்கம். என்றாலும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்வதும் அதிகரித்து வருகிறது – முக்கியமாக சிறிய நாடுகளிலிருந்து பெரிய நாடுகளுக்கு.
ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது பல நாடுகளுக்கு சிதறி ஓடிய ஐரோப்பியர்களின் மறுவாழ்வுக்காக, ஐ.நா. பொதுக்குழுவால் 1950 டிசம்பர் 14-ம் தேதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் மூன்று ஆண்டுகள் இயங்கினால் போதும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன் தேவை தொடர்ந்துகொண்டே இருக்க, இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர, சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இந்த ஆணையத்துடன் இணைந்தும் தனித்தனியாகவும் அகதிகள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன.
ஐ.நா. பொதுச்சபை 2016 செப்டம்பர் 19-ம் தேதி ஒரு உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியது. அதில் அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டியது.
இன்றைய காலகட்டத்தில், அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா உள்ளது.ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.மேலும், அதிகளவு அகதிகளை (85%) உள்வாங்கும் நாடுகளாக வளர்ந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 14 சதவிகிதம் அதிகமாகும். சிரியாவிற்கு முன்பு
உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வந்தது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதற்கடுத்து 2-ம் இடத்தில் சோமாலியாவும், 3-ம் இடத்தில் ஈராக்கும், 4-வது இடத்தில் சிரியாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன.அதே வேளையில், 2014-ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 3 கோடி மக்கள் சிரியா மற்றும் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.இவர்களில் கணிசமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது, 5 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
அந்த நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்பவர்கள் 63 லட்சம் பேர். நாட்டுக்குள் இடம் பெயர்வது என்றால் பணியிட மாற்றல் போல அல்ல. தங்களுக்கான பள்ளிகளும், குடியிருப்புப் பகுதிகளும், மருத்துவமனைகளும் குண்டு வீச்சு தாக்குதலால் உருக்குலைந்து போக, வேறு வழியில்லாமல் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். உயிருக்குப் பயந்து நாட்டில் மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் மனிதாபிமான முறையில்கூட உதவிகளை வழங்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியிருக்கிறது. கடுமையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதையும் தாண்டி சிரியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சத்துக்கும் அதிகம். சிரியா மக்களில் பலர் லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.
சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் கார்ப்பரேட் முதலாளிகள் பிற நாடுகளில் மூலதனமிட்டு அந்நாட்டையும் மக்களையும் கொள்ளையிடலாம், மூலதனம் உலகம் முழுவதும் எவ்விதத் தடையுமின்றி பாயலாம் என்ற உலகமயமாக்கக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் ஏகாதிபத்தியவாதிகள் மிகக் கோரமான யுத்தங்களை உருவாக்குகிறார்கள் அப்படி உருவான இடங்களிலிருந்தும் அப்பாவி மக்கள் உயிர் பிழைப்பதற்காக
ஏகாதிபத்திய நாடுகளுக்குள் தஞ்சம் புக நுழைவதை எதிர்க்கின்றனர். அந்நாடுகளின் போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டு அகதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். தனது நாட்டின் எல்லையில் உள்ள சுரங்க ரயில் பாதையில் அகதிகள் நுழைவதைத் தடுக்க கோடிக்கணக்கில் பிரிட்டிஷ் அரசு செலவிட்டு வருகிறது. ஹங்கேரி அரசானது, செர்பியாவை ஒட்டிய எல்லையில் ஏறத்தாழ 12 அடி உயரமுள்ள முள்வேலியை அமைத்து அகதிகள் நுழைவதைத் தடுக்கிறது. ஐரோப்பாவின் நவ நாஜிக் குழுக்கள் அகதிகளான அந்நியரை வெளியேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டங்களை நடத்தி நள்ளிரவில் தீ மூட்டி அச்சுறுத்துகின்றன. இத்தனைக்கும் நடுவிலும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் தப்பியோடிவரும் அகதிகளுக்கு மனிதாபிமான உள்ளத்தோடு உதவிகளைச் செய்து வருவதோடு, அகதிகளை அனுமதித்து மறுவாழ்வளிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அகதிகள் மீது நாளும் தொடரும் அட்டூழியங்கள் – அடக்குமுறைகள், எல்லைகளிலுள்ள முள்வேலிகளை முறித்துக் கொண்டு உள்ளே நுழையும் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிக்கும் கொடூரம், கண்டெய்னர் லாரிகளில் இரகசியமாக தப்பிக்க முயற்சித்தவர்கள் மூச்சுமுட்டி மாண்டுபோகும் அவலம், மத்தியத் தரைக்கடலில் பிணங்கள் கொத்துக்கொத்தாக மிதந்து கரை ஒதுங்கும் கோரம் – என முதலாளித்துவ உலகின் மனிதாபிமானமற்ற கொடூரத்தைக் கண்டு உலகமே காறி உமிழ்கிறது. அகதிகளின் அவலங்களும் ஐரோப்பிய நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளும் உலகெங்கும் அம்பலமாகத் தொடங்கி, குறிப்பாக சிறுவன் அய்லான் பிணமாக மண்ணில் புதைந்துள்ள புகைப்படம் வெளியாகி கண்டனங்கள் வலுத்த பிறகுதான், ஐரோப்பிய அரசுகள் வரம்புக்குட்பட்ட அளவுக்கு அகதிகளைத் தற்காலிகமாக ஏற்பதாக அறிவித்துள்ளன
சிரியாவிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடுவது ஏன், அந்நாட்டில் எதற்காகப் போர் நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதைப் பற்றி ஊடகங்கள் அரைகுறை உண்மைகளையே கூறிவருகின்றன. இஸ்லாமிய நாடுகள் என்றாலே அங்கு ஜனநாயகமோ, அமைதியோ இருக்காது, அராஜகமும் இனக்குழுக்களின் வன்முறைத் தாக்குதலும்தான் இருக்கும் என்ற கருத்து மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் இடம் கொடுத்து உதவலாம் என்றாலும், இத்தனை இலட்சம் பேர் அகதிகளாக வந்தால் ஐரோப்பிய நாடுகளால் எப்படிச் சமாளிக்க முடியும் என்று வாதிட்டு, இது நாகரிகமற்ற இஸ்லாமிய நாடுகள் ஏற்படுத்திய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், சிரியாவில் கூலிப்படைகள் நடத்தும் போருக்கும், பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அல்லற்படுவதற்கும் முழுமுதற் காரணம் அமெரிக்காதான். நிலையான அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்தான் சிரியாவில் அதிபர் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்து தமக்கு விசுவாசமான ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் கைக்கூலிகளைக் கொண்டு மத, இன மோதல்களைத் தூண்டிவிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து, மனிதப் பேரழிவைத் தோற்றுவித்த கிரிமினல் குற்றவாளிகளாவர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகை மேலாதிக்கம் செய்யும் வெறியோடு புறப்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, போக்கிரி அரசுகளைத் தண்டிப்பது, மனித உரிமை – ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் மேற்காசியாவை மறு காலனியாக்கும் தமது திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடப்பதால்தான் அகதிகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அகதிகள் குவிவதால் ஐரோப்பிய கண்டமே நெருக்கடியில் சிக்கி இக்கட்டான நிலைமைக்கு ஆளாகி நிற்பதைப் போலவும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் கூசாமல் புளுகி வருகின்றன

மியான்மர்
"""''''''"""'''''''''''''''''''''''''
பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மியான்மர் நாட்டில் வசித்து வரும்
ரோகிங்யா சமூகத்தினர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் மக்களாக உள்ளனர். இவர்கள் மீது, அந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களாக உள்ள புத்த மதத்தினர் நடத்திய தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்,.
பல லட்சம் ரோகிங்யா மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். . ராணுவத்தினரே ரோகிங்கியா மக்களை தாக்கி கொன்று வருகிறார்கள்.

இதனால் ரோகிங்யா மக்கள் அகதியாக வங்காளதேசத்திற்கு தப்பி ஓடுகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள கலவரத்தில் மட்டும் 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக ஐ.நா. பொதுச்செயலாளர் கூறும்போது
மியான்மர் நாட்டில் மனிதாபிமானத்திற்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு ரோகிங்யா மக்களில் 3-ல் ஒரு பங்கினர் அகதிகளாக வெளியேறி விட்டார்கள். மனிதாபிமானமற்ற செயலுக்கு சிறந்த உதாரணமாக அந்த நாடு மாறி இருக்கிறது.
ரோகிங்கியா மக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறார்கள். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. அங்கு சுமூக நிலை திரும்புவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அவர் கூறினார்.
மேலும் 64 நாடுகளில் வசிக்கும் 35 லட்சம் பேரை நாடற்ற மனிதர்கள் என்று ஐ.நா. அடையாளம் கண்டுள்ளது. உலக அளவில் அவர்களது எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவிலும் உண்டு.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள்.
இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் 1983ம் ஆண்டு முதன் முதலில் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதி வாய்ப்புள்ள சிலர் விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் கணக்கின் படி இக்காலப்பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர்.
அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதியாக வரும் மக்களை இங்கு வைத்து அவர்கள் உண்மையான அகதிகள் தானா என்பதை உறுதி செய்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த 65000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே சுமார் 35000 பேர் வசித்து வருகின்றனர்.
இவ்வுலகில் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.
இதுபோக
இலங்கையிலும் சொந்த நாட்டில் அகதிகள் உள்ளவர்களின் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும் கூட, கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.
இலங்கையில் இருந்து
தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, முகாமை விட்டு வெளியே போகவர என எந்தநிலைடமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை. எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை. இதுதான் இலங்கை அகதிகளின் நிலை
இந்தியாவில் இலங்கை அகதிகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால் உயர்கல்வி, பிரஜா உரிமை போன்ற விஷயங்களில் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கின்றனர்
தமிழகத்துக்கு குடிபெயர்ந்து 3 தலைமுறைகளைக் கடந்துவிட்ட பின்பும் இதுவரை குடியுரிமை இல்லாமல் வசித்து வருகின்றனர்
பட்டம் பயின்றவர்களும் அரசு வேலை பெற முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் மருத்துவத்தில் அகதிகளுக்காக 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், அவையும் இப்போது பறிபோய்விட்டது.
தொழில்நுட்பக் கல்வியில் இடம் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதிலும் எந்த நாட்டு குடிமகன் என்பதில் பிரச்னை எழுகிறது. இதனால் பள்ளிக் கல்வியுடன் நிற்க வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது .
தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டில் இருந்து குடியிருந்து வரும் அகதிகளில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திருமணமாகியுள்ளது. அதில் சுமார் 8 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளன.
மீள்குடியமர்வு என்று வரும்போது இலங்கை தூதரகத்தில் பிறப்புச் சான்றிதழை இலங்கை அரசின் பிறப்பு-இறப்பு பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதற்கான சான்றிதழைப் பெற வேண்டும். அதற்கு பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அவசியமாகிறது. அதனைக் கொடுக்க முடியாமல் ஏராளமான அகதிகள் தவித்து வருகிறார்கள். அகதிகளாகத் தப்பி வந்தபோது பலர் தங்களது உடைமைகளை விட்டுவந்தனர். சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை அவர்களால் எடுத்து வர இயலாததால், இப்போது சிக்கலில் தவித்து வருகிறார்கள்.
அகதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பட்டப் படிப்புகளை முடித்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை இலங்கை அரசு அங்கீகரிப்பதாக உத்தரவாதமளிக்கும் ஒப்பந்தங்கள் இதுவரை இரு நாடுகளிடையே ஏற்படவில்லை. அதனால் இங்கு கல்வி கற்று முடித்தாலும், அந்த நாட்டில் வேலை வாய்ப்பைப் பெற முடியாத நிலை உள்ளது. இன்றைய சூழலில் இருதலைக்கொள்ளி எறும்பாக இலங்கை அகதிகள் தவித்து வருகிறார்கள்.
மீள்குடியமர்வுக்கு இலங்கை சென்றால் தங்களது உடைமைகளைக் கொண்டு செல்ல வேண்டும். இங்கேயே வசித்தால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ளது போன்ற குடியுரிமைச் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் இலங்கை அகதிகளின் மீள்குடியமர்வுக்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தங்களை அரசுகள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
இங்கு கல்வி பயின்றவர்களின் கல்விச் சான்றிதழ்களுக்கு இலங்கையில் அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோடு விமானங்களில் பலர் இலங்கை திரும்பி வருகிறார்கள். அவர்கள் சுமார் 30 கிலோ எடையிலான உடைமைகளையே எடுத்துச் செல்ல முடிகிறது. அதனை மாற்றி, இங்கு தாங்கள் வைத்துள்ள அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் செல்ல வசதியாக தனியாக கப்பல் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மீள்குடியமர்வுக்காகத் திரும்பிச் செல்வோருக்கு ஓராண்டுக்கு நிவாரண உதவி, வீடு, அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவது இரு நாட்டு ஒப்பந்தம் மூலமே சாத்தியம். ஆனால், புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனை விரைவாகப் பரிசீலித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டு அரசியலும் பொருளாதாரமும் சரியான திசைவழியில் செல்கிறதா என்கிற அரசியல் அக்கறை ஒவ்வொருவருக்கும் வேண்டும் இல்லையேல் நாளை நாமும் அகதியே..
கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமர் தீர்த்தம் தெற்கு
இராமேஸ்வரம் 623526,
தொடர்புக்கு 9940817745

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக